முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில் மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த போட்டியில், இந்தியாவை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வங்கதேசத்திற்கு எதிராக சனிக்கிழமை நடந்த டி 20 போட்டியில் பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்ட பின்னர், வருகின்ற இரு சர்வதேச டி 20 கிரிக்கெட்டிற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.