நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இது […]
சக வீரர்களை சுரேஷ் ரெய்னா இலங்கையில் பாடகராக மாறி மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.முத்தரப்பு டி20 தொடரான நிதாஹஸ் கோப்பைக்கான இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில் மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த போட்டியில், இந்தியாவை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வங்கதேசத்திற்கு எதிராக சனிக்கிழமை நடந்த டி 20 போட்டியில் பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்ட பின்னர், வருகின்ற இரு சர்வதேச டி 20 கிரிக்கெட்டிற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.