ஹர்திக் பாண்டியா : கருத்துவேறுபாடு காரணமாக ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படியான ஒரு செய்தி பரவுவதற்கான முக்கிய காரணமே நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை நீக்கியது தான். அது மட்டுமின்றி, மும்பை கேப்டனாக பொறுப்பேற்று ஹர்திக் பாண்டியா […]
IPL2024: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் […]
க்ரிஷ் ஸ்ரீகாந்த் : ஆர்சிபி அணி, ராஜஸ்தான் அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை விமர்சித்து பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கடந்த 19-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்த போது பெங்களூரு அணி, சென்னை அணியை 27 ரன்கள் […]
ஜஸ்டின் லாங்கர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் பதிவியை குறித்தும் அதன் அழுத்தம் குறித்தும் ஜஸ்டின் லாங்கர் கூறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதற்கு ராகுல் ட்ராவிட்டுக்கு இணையான ஒரு பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது பெயர்கள் அடிப்பட்டு கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் […]
பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் 50 ஓவர்கள் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பயிற்சி காலம் முடிந்துவிடும். எனவே, அவருக்கு அடுத்ததாக எந்த வீரர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் வருவார் […]
சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி. வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு நுழையும் குவாலிபயர்-2 போட்டி இன்று நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதி போட்டியை நெருங்கியுள்ளது, இந்த இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஏற்கனவே கொல்கத்தா அணி ஹைதரபாத் அணியை குவாலிபயர் முதல் போட்டியில் வெற்றி பெற்று சென்றுள்ளது. அதே போல இன்று இறுதி போட்டிக்கு தகுதி பெரும் 2-வது அணியாக தகுதி பெற இன்று ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இன்று நடைபெறும் […]
சென்னை : விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். கடந்த மே-22ம் தேதி அன்று ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரில் 17 முறை ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முயற்சி செய்து 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தும் வெளியேறியுள்ளது. மேலும், 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் […]
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இதுவரை படைத்த சாதனைகளை பற்றி விவரமாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடப்பாண்டு தொடரில் மே 22 -ல் நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் மைதானத்தில் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்தி ஐபிஎல் போட்டிகளில் […]
சென்னை : ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மே 22-ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 173 ரன்கள் இலக்குடன் […]
சென்னை : நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டனான டூப்ளெஸ்ஸி இதனால் தோற்றோம் என காரணத்தை விளக்கி கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான விராட் கோலி […]
சென்னை : பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது ஓய்வு ஐபிஎல் தொடரிலிருருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர் 2024 தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இதுதான் தனது கடைசி ஐபிஎல் தொடர் அறிவித்திருந்தார். தற்போது அவர் தெரிவித்தது போல நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்த்துள்ளார். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஆரசிபி அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் […]
IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக பெங்களூரு […]
சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆன்ட்ரே ரசல் சுனில் நரேன் இந்த ஒரு விஷயத்துக்கு அவர் ஒத்துக்கவே இல்லை என கூறி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராகவும், சுழற் பந்து வீச்சாளராகவும் சுனில் நரேன் கலக்கி வருகிறார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்துள்ளார் மட்டுமின்றி 14 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். இவர் இன்னும் 39 ரன்கள் மற்றும் […]
சென்னை : டி20 உலகக் கோப்பை 2024 தூதர் யுவராஜ் சிங் வரவிருக்கும் போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் எந்தெந்த இடத்தில் விளையாடினாள் சரியாக இருக்கும் என்பது பற்றி பேசியுள்ளார். ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்படவுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான வலுவான இந்திய அணி ஜூன் 5-ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில், இந்திய […]
சென்னை : டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது வங்கதேச அணி அமெரிக்கா அணியுடனான மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்களாதேச […]
சென்னை : நேற்று நடைபெற்ற குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியிடம், ஹைதரபாத் அணி தோல்வியடைந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி பேசி இருந்தார் ஐபிஎல் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடரின் முதல் குவாலிபயர் போட்டியானது நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த குவாலிபயர் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் அதிரடியாக விளையாடலாம் என களமிறங்கிய […]
சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றிருந்தது. தற்போது, இன்றைய நாளின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் […]
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் , அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். […]
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பிசிசிஐ நடத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முடிவடைந்து விடும். டிராவிட் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டாமல் […]