டி20 2024 : ஸ்டார்ஸ்போர்ட்ஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் கணிக்கும் 4 அணிகளை அறை இறுதி போட்டிக்கு முன்னிறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 9 மைதானங்களில் வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக இந்த ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்த டி20 உலகக்கோப்பை தான். […]
டி20I : கிரிக்கெட் போட்டிகள் என்றாலே முதலில் 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் என்று தான் இருந்தது மெதுவாக செல்லும் அந்த போட்டிகளை ரசிகருக்கு மேலும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இந்த 20 ஓவர் போட்டியானது கொண்டு வரப்பட்டது. டி20 போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்க்கும் தொடர்களான ஐபிஎல், உள்ளூர் தொடர்கள், சுற்றுப்பயணகள் என அதனுடன் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையும் அடங்கும். கடந்த 2007-ம் ஆண்டு இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது இந்தியாவில் முதல் முறையாக […]
கவுதம் கம்பிர் : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பிர் தான் செயலாற்றுவார் என உறுதியான ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் வருகிற இந்த டி20 உலகக்கோப்பையுடன் அந்த பதவியை நிறைவு செய்ய உள்ளார். அதன் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ மிகப்பெரிய தேடுதலை நடத்தியது. அதற்கு பல விண்ணப்பங்களும் வந்ததாக பிசிசிஐ […]
ரிஷப் பண்ட் : தனது கஷ்டமான காலத்தில் நடந்த கசப்பான சில அனுபவங்களை ஷிகர் தவானுடன் பகிர்ந்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி அன்று இந்தியா அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நெடுஞ்சாலையில் பயங்கரமான கார் விபத்திற்குள்ளானார். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட வந்த அவர் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். அதனை தொடர்ந்து இந்த வருடத்தில் ஐபிஎல் தொடரில் டெல்லி […]
ரிக்கி பாண்டிங் : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி சார்பில் பெரிய தாக்கமாக ரிஷப் பண்ட் அமைவார் என ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இவர் சிறப்பாக விளையாடி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தார். இவர் 10 போட்டியில் விளையாடி 160.60 […]
டி20I : டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற முதல் 5 போட்டிகளின் சுருக்கத்தை தற்போது பார்ப்போம். வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பையின் பயிற்சி போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற உள்ளது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற 5 போட்டிகளை ஐசிசி தங்களது க்ஸ் (X) தளத்தில் பதிவு செய்துள்ளது. அப்போட்டிகளின் சுருக்கங்களை பற்றி பார்ப்போம். நெதர்லாந்த் vs இங்கிலாந்து (2009) […]
டி20I : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது. ஐபிஎல் திருவிழா நிறைவு பெற்று அடுத்த கட்டமாக கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த ஒரு மாத விருந்தாக 20 ஓவர் உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் மறுபுறம் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஐசிசியின் எந்த ஒரு பெரிய போட்டிகள் நடந்தாலும் அதற்கு […]
ஜெய்ஷா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக ஜெய்ஷா தற்போது அறிவித்துள்ளார். 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு நேற்றைய நாளில் முடிவடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றினார்கள். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்தவுடன் […]
ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம். இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 […]
டி20 உலகக் கோப்பை : இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட நியூயார்க்கிற்கு வருகை தந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் இருக்கிறது என்றே சொல்லலாம். டி 20 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1 தொடங்கி நடைபெற இருக்கிறது. எனவே, உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் எல்லாம் பயிற்சிகளை […]
ஐபிஎல் 2024 : 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் எந்தெந்த வீரர்கள் என்னென்ன விருதுகள் வென்றுள்ளார்கள் என்பதை பற்றி பார்க்கலாம். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச்-22 ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியதுடன் நன்றாகவே நடைபெற்று வந்தது. மேலும், நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக தங்களது 3-வது ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி என சென்னை, […]
IPL2024: கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. ஏனென்றால் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், […]
பாபர் அசாம் : சர்வேதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி நடைபெறுகிறது. மேலும், இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இருக்கிறார்கள் இரு அணிகளும் மே-9ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவின் சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் நாளை மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது தற்போது இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. 14 அணிகளில் சிறப்பாக விளையாடிய இரு அணிகளான ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணியும், மும்பை அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி […]
ஷாஹித் அப்ரிடி : டி20 உலகக்கோப்பையின் தூதரில் ஒருவரான ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் அணி தான் இந்த உலகக்கோப்பையில் எனக்கு பிடித்தமான அணி என்றும் அவர்கள் இறுதி போட்டிக்கும் செல்வார்கள் என சில காரணங்களையும் கூறி இருக்கிறார். வரவிற்கும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தங்களது வீரர்களின் […]
மாத்தியூ ஹெய்டன் : நாளை நடக்கப்போகும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என சில காரணங்களை வைத்து மாத்தியூ ஹெய்டன் கூறி இருக்கிறார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் லீக்கில் ஒரு போட்டி, குவாலிபயர்-1 என 2 முறை […]
பேட் கம்மின்ஸ் : ஹைதரபாத் அணியின் கேப்டனான பேட் கம்மினிஸ் தனது அம்மா அவரிடம் சொன்ன வார்த்தைகளை தற்போது தி டெஸ்ட் சீசன் தொடரில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். அதற்கு உதாரணம் தான் 8 வருடங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் இருந்த ஹைதராபாத் அணியை இந்த தொடரில் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றுருக்கிறார். எந்த […]
தினேஷ் கார்த்திக் : 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் ரசிகர்களால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் நடப்பாண்டில் (2024) ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து விடைபெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் […]
சுரேஷ் ரெய்னா : பாகிஸ்தானின் நிருபர் ஒருவரின் டீவீட்டுக்கு தக்க பதிலடி ரிப்ளேவை ரெய்னா கொடுத்துள்ளார், பின்பு அந்த டீவீட்டை டெலீட் செய்துள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பைக்கு தூதராக (Ambassador) ஜமாய்க்காவின் தடகள வீரர் உசைன் போல்ட், யுவராஜ் சிங், க்றிஸ் கெயில் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். தற்போது, மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அஃப்ரிடியும் இவர்களை தொடர்ந்து புதிய தூதரக ஐசிசியால் அறிவிக்கப்பட்டார். […]
ஐசிசி : ஐசிசி வெளியிட்டுள்ள புதிய கீதத்தில் (Anthem) இந்திய அணிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐசிசி (ICC) எப்பொழுதும் இது போல சர்வதேச தொடரை தொடங்குவதற்கு முன்பு எல்லா அணிகளையும், கிரிக்கெட்டையும், கிரிக்கெட் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் கீதம் (Anthem) ஒன்றை வெளியிடுவார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஐசிசி கீதம் ஒன்றை வெளியிட்டனர். 3 நிமிடம் கொண்ட அந்த கீதத்தை உலக புகழ் கிராமி விருது (Grammy-winning composer) […]