வதோதரா : குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ராதா யாதவ் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளார். குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வதோதரா பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 20, 000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, குஜராத் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வதோதராவில் தங்கி […]
சென்னை : 2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக ஜாஹிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நடைபெறப் போகும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் ஐபிஎல் அணிகள் தீவிரமாக இருந்து வருகிறது. அதன் விளைவாக தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இது குறித்த […]
சென்னை : ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்ற ஜெய்ஷா, தான் இந்த கிரிக்கெட் ஃபார்மட்டிற்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவராக எந்த வித போட்டியுமின்றி ஜெய்ஷா தேர்வாகியுள்ளார். இதனால் வரும் டிசம்பர்-1 முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்க உள்ளார். 35 வயதில் ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் இளம் தலைவர் இவர் தான் எனப் பெருமையும் இவர் பெற்றுள்ளார். ஜெய்ஷா, பிசிசிஐ-யின் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் பல மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவந்துள்ளார். […]
சென்னை : ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இனி போதாத காலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. புதிய ஐசிசி தலைவர் “ஜெய்ஷா” ..! சர்வேதச கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர்-30 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதனால், அடுத்த தலைவருக்கான தேடுதலில் ஐசிசி இருந்த நிலையில் பிசிசிஐ தலைவராக இருந்த ‘ஜெய்ஷா’ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஐசிசி […]
சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி டெஸ்ட் தொடரானது வரும் செப்.5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி […]
சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஸியில் தான் விளையாடிய அனுபவம் பற்றி இந்திய லெக் ஸ்பின்னரான கார்ன் ஷர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர் தான் கார்ன் ஷர்மா. இவர், கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக முதல் முறை விளையாடினார். இந்த தொடர் தான் அவருக்கு முதல் டெஸ்ட் தொடராகும். மேலும், […]
சென்னை : நடைபெறப் போகும் ஐபிஎல் 2025 ஆண்டுக்கான தொடரில் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் 2024 தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்தது. அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருப்பர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அப்போது பெரும் […]
சென்னை : அருண் ஜெட்லீயின் மகனான ரோகன் ஜெட்லீ அடுத்த பிசிசிஐ செயலாளராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. கடந்த 4 வருடங்களாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே ஐசிசியின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. மேலும், கிரெக் பார்கலே இம்முறை தன்னை 3-வது தவணையாக ஐசிசி தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், அவரின் இந்த அறிவிப்பைத் […]
சென்னை : ஆட்டமிழந்த கோபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட் ஹெல்மெட்டை கழற்றி பூங்காவிற்கு வெளியே அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Max60 Caribbean 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில் ப்ராத்வைட்டின் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸ் அணிகளும் மோதியது. இந்த போட்டியின் போது பேட்டிங் செய்ய வந்த கார்லோஸ் பிராத்வைட் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கார்லோஸ் பிராத்வைட் அடித்த அந்த […]
சென்னை : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகப் பாகிஸ்தான் அணியை, வங்கதேச அணி வீழ்த்தியதை தொடர்ந்து கேப்டன் ஹசன் ஷாந்தோ பேட்டி அளித்துள்ளார். முதல் டெஸ்ட் ஹைலைட்ஸ் ..! வங்கதேச அணி பாகிஸ்தானில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் அணி […]
சென்னை : இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக உள்ள டெஸ்ட் தொடரில் தோல்வியைக் கண்டால் டெஸ்ட் தரவரிசையைப் பாதிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் (WTC) அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா அணி 68% வெற்றி சதவிகிதங்கள், 74 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 2 இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானை “மிஸ்டர் ஐசிசி” என ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணத்தைப் பற்றி பார்ப்போம். இந்திய அணியின் வரலாற்றில் தொடக்க பேட்ஸ்மானாக ஷேவாக், சச்சினைப் போலத் தொடக்க வீரருக்கென தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஷிகர் தவான். உள்ளூர் போட்டிகளை விடவும் ஐசிசி ஒருநாள் போட்டிகள், அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத் தொடர்களிலும் தான் இவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட பேட்ஸ்மேன் ஆவார். […]
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இந்திய ஜெர்சி ஏலம் விடப்பட்ட நிலையில், ரூ.40 லட்சத்திற்கு விற்கப்பட்டதுள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி இருவரும் ‘கிரிக்கெட் ஃபார் சாரிட்டி’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை மும்பையில் நடத்தினார்கள். அதில், கிரிக்கெட்டில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள் சிலர் நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்காக கல்வி உதவிக்காக விப்லா அரக்கட்டைகளுக்காக நடத்தப்பட்டது. அதிகம் […]
டெல்லி : இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தனது 38-வது வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 13 ஆண்டுகால பயணம் ..! கடந்த 2010-ம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் இடம்பெற்ற ஷிகர் தவான். இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக விளையாடினார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான், 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தொடக்க வீரராக, ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்க தொடங்கினார். அந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் […]
சென்னை : பும்ராவுக்கு கேப்டன்ஷி பொறுப்பு கொடுத்தால் அவருக்கு கூடுதல் பாரமாக இருக்கும் எனவும் இதனால் அவர் கேப்டனுக்கு சரியாக இருக்க மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை போல, அணியை வழிநடுத்துவதிலும் சிறப்பான கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் 2022 இல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்தியாவை ஒரு நிலையான கேப்டனாக […]
சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான குல்தீப் யாதவ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னின் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். குலதீப் யாதவ், ஷேன் வார்னின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். ஆஸ்திரேலியா அணியில் […]
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் மகனான ஹாரி சிங் களமிறங்கியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதி வருகிறது. இந்த தொடரில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் […]
சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம். இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது. இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார். தற்போது வரை ஜெய்ஷா இந்தப் […]
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறப் போகும் பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துப் பேசி உள்ளார். ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரானது இந்த ஆண்டின் இறுதியில் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால், இப்போதே அந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகம் பெற்று வருகிறது. மேலும், அந்த தொடரை வெல்லப் போவது யார் என்று […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலாளரான ஜெய்ஷா அடுத்த ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிசிசிஐ செயலாளர் ..! கடந்த 2019ம் ஆண்டில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளராக இருந்த ஜெய்ஷா அந்த பதவியிலிருந்து விலகினார். அதன் பின் அதே ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இவர் பிசிசிஐ-யின் செயலாளராகப் பதவியேற்றது முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் எடுக்கும் சில அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பலரும் வரவேற்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக […]