ஆந்திர பிரதேஷ் : இன்று துலிப் டிராபி தொடரின் 4-வது போட்டியில் பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த 2-வது பந்திலேயே காயம் ஏற்பட்டு ரிட்டையர் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா B அணியும் இந்தியா C அணியும் இன்று விளையாடி வருகிறது. […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா ஏலத்தில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொண்டு விடுவிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது. அதில் குறிப்பாக, திறமையான வீரர்களை பல கோடிகள் செலவு செய்து எடுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மெகா ஏலத்தில், எந்த வீரர்களை […]
சவுத்தாம்ப்டன் : ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 3 டி20 போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஹெட்டும், ஷாட்டும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய […]
சென்னை : இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிரடியான ஆட்டத்தை காட்டி அனைத்து அணியையும் நடுங்க வைத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, இந்த ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 287 ரன்கள் அடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. அதற்கு முக்கியமான காரணமே அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தான் என்றே சொல்லலாம். இவர்களுடைய […]
சென்னை : இந்திய வேக பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜன் தனக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தான் மிகவும் பிடித்தது என தற்போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இடது கை வேக பந்து வீச்சாளரான நடராஜன் ஒரு டெஸ்ட் போட்டி, 2 ஒருநாள் போட்டி சொல்லப்போனால் இந்திய அணிக்காக அதிகமாக போட்டிகளில் விளையாடியதில்லை. அவர் முதலாகவும் கடைசியாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அதிலும் இந்திய அணி […]
சென்னை : ஐசிசி நடத்தும் மிகப்பெரிய கோப்பைக்கான தொடர் என்றாலே ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும், 7 வருடங்களுக்கு பிறகு மினி உலகக்கோப்பை எனப்படும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றிருப்பார்கள். இந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல அணிகள் வெற்றி பெற்றிருக்கிறது. […]
சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டின் இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்க்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடர் பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வரப்போகும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு மும்பை அணியில் அபிஷேக் சர்மா, பில் சால்ட் மற்றும் கே.எல்.ராகுல் என 3 […]
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்ததை தொடர்ந்து அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருந்தார். இந்த சம்பவம் அந்த சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு கே.எல்.ராகுலை தனது […]
சென்னை : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான துலிப் ட்ராபி தொடர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா-A vs இந்தியா-B மற்றும் இந்தியா-C vs இந்தியா-D என 2 போட்டிகள் அன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சை […]
ஆஸ்திரேலியா : விராட் கோலி தன்னுடைய திறமையான பேட்டிங்கிற்கு எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ, அதே அளவுக்கு ஆக்ரோஷமாக அவர் எதாவது செய்யும் விஷயங்களிலும் பேசும் பொருளாக அமைந்துவிடுவார். இப்போது மட்டுமல்ல, விராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்ப காலட்டத்தில் இருந்தே, மைதானத்தில் செய்யும் விஷயங்கள் சர்ச்சைகளை மாறி வருகிறது என்றே சொல்லலாம். அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து சிட்னி மைதானத்தில் விளையாடினார். அந்த […]
சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அதில் இப்பொழுதே பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. அது தகவலாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் […]
சென்னை : விஜயின் கோட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தினை பார்த்த மக்களை பலரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு லியோ படத்தை தொடர்ந்து, இந்த படமும் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை போலவே, பிரபலங்கள் பலரும் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, சிவகார்த்திகேயன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோர் முதல் நாள் முதல் […]
சென்னை : இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த தொடர் தான் துலீப் ட்ராபி. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் இந்த தொடருக்கு சற்று எதிர்பார்ப்பு கூடுதல் என்றே கூறலாம். அதற்கு காரணம் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடிகிறார்கள். மேலும், இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தான் நடைபெற இருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கும் தேர்வாவர்கள் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனால், இந்த தொடர் மீது இந்திய அணியின் […]
சென்னை : நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மீண்டும் இணையவுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல இலங்கை முன்னாள் வீரரான குமார் சங்ககாரா ராஜஸ்தான் அணிக்கு டைரக்டராகவும் தொடரவுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் ஆலோசகராகச் செயல்பட்டார். அதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாகவும் இவர் விளையாடி இருந்தார். […]
சென்னை : வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. இதில், 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வங்கதேச அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. வங்கதேச அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால், கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி மிக சிறப்பாக விளையாடி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக […]
சென்னை : கடந்த 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக யுவராஜ் சிங் அமைந்திருப்பார். அதிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு யுவராஜ் சிங் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாடியிருப்பார். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு அவரது புற்று நோய் […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் சிங், இவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பல தகவல் அந்நாட்களில் பேசப்பட்டு வந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை என இரண்டு முக்கிய கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும் மிகமுக்கிய காரணிகளாக அமைந்தனர். மேலும், இருவரையும் தாண்டி […]
சென்னை : கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்திருக்கும். 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாதது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வியின் எதிரொலியால் ரசிகர்களே அணியில் உள்ள ஒரு சில வீரர்களை மாற்ற வேண்டுமெனக் கூறி வைத்தனர். இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது […]
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இந்த ஆண்டு நடத்தி வரும் தொடர் தான் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இதில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியின் போது தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது மும்பை அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் வரவில்லை. மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரோஹித் மற்றும் கோலி இருவரும் இதை செய்திருக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரானது வரும் செப்-5 முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளைச் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், இந்த 4 அணிகளிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர்க்கு பிசிசிஐ விடுப்பு அறிவித்திருந்தது. இந்த தொடருக்கான அணிகளை அறிவித்த போதே பலரும் ரோஹித் […]