தென்னாப்பிரிக்கா : உலகக்கோப்பை போட்டி என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு ராசியே இல்லாமல் ஆகிவிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், 5 மாதங்களில் 2 முறை டி 20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதாவது, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், வெற்றி பெற்று தங்களுடைய முதல் டி20 கோப்பையை வாங்கலாம் என விளையாடிய நிலையில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதைப்போல, கடந்த 5 […]
துபாய் : 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெறச் செய்துள்ளது. வெற்றிபெற்ற குஷியுடன் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது தான் இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையை வெல்ல […]
துபாய் : நடைபெற்ற வந்த மகளிர் டி20 கோப்பை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. எந்த அணி புதிதாக கோப்பையை வெல்லும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இதில், முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. அதில் தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன சுசி […]
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா […]
பெங்களூர் : இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது கடந்த, அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. அந்த போட்டியில், குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்ற படி மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டியின் முதல் நாள் நடைபெறாமல் போனது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த தினம் இரண்டாம் நாள் போட்டியானது தொடங்கியது . அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]
சென்னை : தோனி ரசிகர்களுக்கு எப்போதும் பதட்டமாக இருக்கும் விஷயம் என்றால் அவர் எப்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்பது தான். எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறப்போகிறாரா? என ரசிகர்கள் கவலையுடன் சேர்ந்த எதிர்பார்ப்புகளில் காத்திருக்கிறார்கள். […]
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்த சம்பவங்கள் தான் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். போட்டியின் போது அவர் அடித்த ஒரு அபாரமான சிக்ஸர் ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் வியந்து பார்க்க வைத்தது. போட்டியின் போது, 87வது ஓவரை டீம் சவூதி வீச வந்தார். அந்த […]
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. இதற்கு முன், இந்த போட்டியின் முதல் நாளில் மழை பெய்ததால் அன்றைய தினம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான 2-ஆம் நாள் தான் போட்டியானது தொடங்கியது. அன்றைய தினம் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், நேற்றைய நாள் அதிலிருந்து மீண்டு வந்த இந்திய […]
ஹரியானா : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 கோப்பை தொடரானது சமீபத்தில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியானது நேற்று ஹரியானாவில் உள்ள சவுத்ரி பன்சி லால் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த தமிழ்நாடு மகளிர் அணியும், உத்தரப் பிரதேச அணியும் மோதியது. விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் உத்தர பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்து. அதன்படி, […]
பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது மழைபெய்து வருகிறது. ஏற்கனவே வடமேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் சூழலில், பெங்களூரு பகுதியிலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் வானிலை நிலவரம் கூறுவது போல சில தனியார் […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று 2-ஆம் அரை இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும், தென்னாபிரிக்கா மகளிர் அணியும் மோதியது. இதில், டாஸ் வென்ற நியூஸிலாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்கத்தில் விளையாடிய இரு வீராங்கனைகளும் […]
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த அக்-13 ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர் தொடங்கியது. இலங்கை அணி கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டிஸ் அணியை இதுவரையில் ஒரு தொடரைக் கூட கைப்பற்றியது கிடையாது. இதனால், இந்த தொடரைக் கைப்பற்றினால் இலங்கை அணி ஒரு உலகக்கோப்பையைக் கைப்பற்றியதற்குச் […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பணியில் ஐபிஎல் வட்டாரங்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில், ஒரு சில அணிகளுக்கு முரண்பாடு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், டெல்லி அணியின் தற்போதைய கேப்டனான […]
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், போட்டியின் 2-ஆம் நாளான நேற்று, இந்த முதல் போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்த தவறான முடிவால் இந்திய அணி, நேற்று பேட்டிங்கில் தடுமாற்றத்திற்கு உள்ளானது. மேலும், முதல் இன்னிங்ஸ்க்கு 46 ரன்களுக்கு 10 விக்கெட்டையும் இழந்து மோசமான ஒரு […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. நல்ல ஒரு தொடக்கத்தை கொடுக்கத் தவறிய கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஜார்ஜியா வேர்ஹாம் 5 […]
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல அதற்கு முன்னதாகவே பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் இயக்குநர்களையும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் டெல்லி அணி தெளிவான முடிவில் இருப்பதாகவும், நம்மபதக்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் இருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
பெங்களூர் : கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி நிதானமாக விளையாடியும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத அளவுக்குத் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து. […]
பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் குவித்துள்ளது. அதிலும், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டும் மட்டும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க்கு களமிறங்கவிருக்கிறது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் […]
டெல்லி : கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு பங்கு உண்டு என கனடா பிரதமர் ட்ரூடோ முன்னதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக முற்றியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப வரவழைத்த இந்தியா, இங்குள்ள கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது. அதன்படி, 6 கனடா தூதரகள் அனைவரும் வருகிற அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை […]
பெங்களூர் : இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக நடைபெறாமல் போனது. இதனால், இன்று காலை மழை இல்லாததன் காரணமாக, டாஸ் போடப்பட்டு போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மோசமாக தடுமாறியே விளையாடி வந்தது. தொடக்க வீரரான ரோஹித் […]