#SAvsAUS: டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா.! பந்துவீச தயாராகும் ஆஸ்திரேலியா.!

SAvsAUS

SAvsAUS: நடப்பாண்டுக்காண ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது இன்று நடைபெறுகிறது. இதில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது.

இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் 7 லீக் போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. நடப்புத் தொடர் முழுவதிலும் தென்னாப்பிரிக்கா 300 முதல் 400க்கும் அதிகமான ரன்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.

அதோடு கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியது. அதேபோல 5 முறை உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, முதல் இரண்டு லீக் போட்டியில் தோல்வி அடைந்தது.

இருந்தும் கடுமையாக முயற்சி செய்து, அடுத்தடுத்து விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா தனது 6 வது உலக கோப்பைப் படத்திற்காக இந்தியாவுடன் மோதும். ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் இரண்டு அணிகளுமே 3 முறை வெற்றியடைந்துள்ளன. ஒரு போட்டி டை ஆனது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் சிறந்த ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் வெற்றி பெறும் அணி 19ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும். தோல்வியுறும் அணி 3 வது இடத்தைப் பிடிக்கும்.

எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய அரையிறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

தென்னாப்பிரிக்கா

குயின்டன் டி காக்(W), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(w), பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்