இந்திய விக்கெட் கீப்பர்-ஓப்பனர் இஷான் கிஷன் நேற்று ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரிஷப் பந்த் இல்லாத நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வரும் இஷான் கிஷான் இரண்டாவது போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார 146 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பவுன்சர் இஷான் கிஷான் தலையின் நடுவில் (ஹெல்மெட்டில்) அடித்தது. இதையடுத்து, இஷான் கிஷான் உடனடியாக ஹெல்மெட்டை கழற்றி தரையில் அமர்ந்தார்.
பின்னர், மைதானத்திற்கு வந்த மருத்துவர் செக்கப் செய்தார். இதன்பிறகு, இஷான் கிஷான் தனது ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இஷான் கிஷான் தனது விக்கெட்டை இழந்தார். 15 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். போட்டி முடிந்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக அவர் உடனடியாக காங்ராவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஐசியூவில் வைக்கப்பட்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இஷான் கிஷானுடன் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் சந்திமாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சண்டிமாலின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இன்று தொடரின் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இஷான் உடல்தகுதி இல்லாவிட்டால் மயங்க் அகர்வாலுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…