உலகக்கோப்பையை வெல்ல கேப்டன் மட்டுமே காரணம் இல்லை.! கம்பீர் விமர்சனம்.!
1983 உலகக்கோப்பை புகைப்படத்தில் கபில் தேவ் புகைப்படம் மட்டுமே காட்டப்படுகிறது. – கம்பீர் சாடல்.
நேற்று உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியினர் மீது பல்வேறு விமர்சனங்களும், அதே போல வீரர்களுக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013ஆம் ஆனது சாம்பியன் டிராபி வென்றதே கடைசி ஐசிசி கோப்பையாகும்.
இந்த உலக கோப்பை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவிக்கையில், 1983 உலகக்கோப்பை வெற்றி குறித்து தனது கருத்தை பதிவிட்டார். அதில், 1983 உலகக்கோப்பை பற்றி அனைவருக்கும் காட்டப்படும்போது, கோப்பையுடன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் மட்டும்தான் இருக்கிறது. அதே கோப்பையுடன் வேறு வீரர்கள் காட்டப்படுவது இல்லை.
அந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் மொஹிந்தர் அமர்நாத் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை பெற்று இருந்தார் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது என உலகக்கோப்பை பற்றி தெரிவித்து இருந்தார் கவுதம் கம்பீர்.
2011 தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் இறுதி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடி 122 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் 79 பந்துகளில் 91 ரன்கள் அடித்து இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று இருப்பார் கேப்டன் தோனி.