ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு..!துவக்க வீரர் தூரம்..!!
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கும் இந்த தொடரில் விளையாடி வரும் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது மேலும் தற்போது இன்னும் ஒரே ஒரு டி20 போட்டி மட்டுமே மீதம் உள்ளது இதில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்த தொடர் முடிந்தவுடமே வங்கதேச அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆனது தற்போது அறிவித்துள்ளது.
அதில் தொடக்க வீரர் காலின் முன்ரோ அதிரடியாக அணியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்.மற்றுமோரு துவக்க வீரர் மார்டின் கப்டில் மீண்டும் தன் அணிக்கு திரும்பியுள்ளார்.அதன்படி
கேன் வில்லியம்சன் (கேப்டன்) டாட் ஆஸில், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிராந்தோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லாதம், கொலின் முன்ரோ ஜிம்மி னீஷம், ஹென்றி நிக்கோலஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி மற்றும் ரோஸ் டெய்லர் இந்த அணி வங்கதேச அணியுடன் விளையாட உள்ளது.