IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை விட அதிரடியாக விளையாடி 18.2 ஓவர்களில் இந்த இமாலய இலக்கை அடித்து சாதனை படைத்தனர்.
இதன் மூலம் பல சாதனைகளை இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியினர் முறியடித்துள்ளனர். அது என்னென்ன என்று நாம் தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடர் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்களை சேசிங் செய்து தென் ஆப்ரிக்காவின் அதிகபட்ச சேசிங் சாதனையை முறியடித்தது பஞ்சாப் அணி.
மேலும், ஒரு டி20 போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து அதிக ரன்களை இதற்கு முன், இதே ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் மோதிய போட்டியில் 549 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு 2-வதாக ஹைதராபாத் மும்பை அணிகள் இதே ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் சேர்ந்து 523 ரன்கள் குவித்தனர்.
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன்கள் சேர்த்தனர் அதன் பிறகு பஞ்சாப் அணியின் 262 என இரண்டு அணிகளின் ஸ்கோரையும் கூட்டினால் 523 என்ற ஸ்கோர் வரும் இது 2-வதாக அந்த பட்டியலில் உள்ள ஹைதராபாத் மும்பை அணிகள் செய்த சாதனையை சமன் செய்துள்ளனர். மேலும், ஒரு டி20 போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி நேற்றைய போட்டியில் அவரகளது இன்னிங்சில் மொத்தம் 24 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். மேலும், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் சேர்ந்து நேற்றைய போட்டியில் 42 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். வெறும் சிக்ஸர்களால் மட்டும் 252 ரன்களை இந்த இரு அணிகளும் நேற்றைய போட்டியில் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…