“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா இறுதி நேரத்தில் வெற்றிக்கான ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, சிறப்பாக விளையாடி 49 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்து வாகை சூடியுள்ளது.ரோஹித் சர்மா83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
கடைசியில் கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராகுல் 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து முக்கியமான ஆட்டமிழந்தார். ஜடேஜா கடைசி சில ஓவர்களில் வந்து 6 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெற்றிக்கான ரன்களை சேர்த்தார். இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபியின் ஃபைனலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி. அணியை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, “இது தான் என்னுடைய கதை, பேட்டிங் வரிசையில் நான் களமிறங்கும் இடம் சில நேரங்களில் ஒரு ஹீரோக்கும், சில நேரங்களில் ஒரு ஜீரோக்கும். இறுதிப்போட்டியில் பரபரப்பான கட்டத்தில் ஹார்டிக் மற்றும் கே.எல். மிகச் சிறப்பாக விளையாடினர்.
இருவரது பார்ட்னர்ஷிப்பை பாராட்டியதோடு, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது ஒரு பெரிய விஷயம். இந்தியாவுக்காக விளையாடுவதும், நாட்டிற்காக சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதும் ஒரு பெரிய சாதனை. நான் வெற்றிபெறும் அணிகளில் முந்தைய கலகட்டங்களில் ஒரு பகுதியாக இல்லாதபோது பற்றி இப்பொது வருத்தப்படுகிறேன். ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த போட்டியை வென்றதில் நான் உடற்தகுதியுடன் இருந்து மிக உயர்ந்த இடத்தில் செயல்படுவது அதிர்ஷ்டம்.” என்று கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் போட்டிக்கு பின் நட்சத்திர வீரர் ஜடேஜா சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுடன் ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சில யுகங்கள் பரவியது. இதனால், அவரது புகைப்படத்தையும் பதிவிட்டு நெட்டிசன்கள், கனத்த இதயத்துடன் வாழ்த்துகள் கூறினர்.
இந்த யுகத்திற்கு முக்கிய காரணம் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜா பவுலிங் போட்டு முடித்ததும், விராட் கோலி எமோஷனலாக அவரை கட்டித் தழுவினார். மற்றொன்று டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றவுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், ஏற்கனவே டி20 -இல் இருந்து ஓய்வு பெற்ற ஜடேஜா, நடப்பு ODI-இல் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக, அஸ்வினையும், ஸ்மித்தையும் ஓய்வுபெறுவதற்கு முன்பு, இதுபோல விராட் கட்டியணைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது ஒய்வு குறித்து ஓய்வு குறித்த வதந்திகளுக்கு வாயை திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்