இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்! முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்!
ரோஹித் சர்மா, விராட் கோலி; பும்ரா, ஆகிய வீரர்களுக்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிசிசிஐ ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20, 3 ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிக்களில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் மூத்த முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வேலை ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என்றால் இந்திய அணியை சுப்மான் கில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிடுவது ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டி நடைபெறுகிறது. எனவே, இந்த போட்டிகளில் அவர்கள் விளையாடினாள் தான் அவர்களால் சிறப்பான ஒரு பார்முக்கு வரமுடியும்.
எனவே, இந்த நேரத்தில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பது சவாலான ஒரு விஷயமாக தான் உள்ளது. இருப்பினும், தற்போது பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு அவர்களுக்கு உடனடியாக அவர்களை அடுத்த தொடர்களில் விளையாட சொன்னால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025யில் விளையாடும் போது அவர்களுக்கு ஓய்வு கிடைக்காதது போல இருக்கும் என்பதால் பிசிசிஐ அவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கத்தில் உள்ளது.
தேர்வுக் குழு இது குறித்து விரைவில் முடிவெடுக்கும், மேலும் தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும். சில மாற்றங்களைத் தவிர்த்து, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அணியைப் போலவே இங்கிலாந்து தொடருக்கான அணியும் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
ரோஹித் சர்மா (c), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (WK), கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி