இன்று முதல் ஒருநாள் போட்டி.., பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு..!

Published by
murugan

இன்று இலங்கை, இந்தியா இடையே முதல் ஒருநாள் போட்டி 3 மணிக்கு  தொடங்கவுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணியில் அனைவருமே  இளம் வீரர்களாக உள்ளனர். மேலும் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று 03:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி  கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு தவான் கேப்டனாகவும்,புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக  விளையாடியவர்கள். இதனால் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Published by
murugan
Tags: SLvIND

Recent Posts

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

59 seconds ago

இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.., முதல் போட்டியில் KKR-RCB மோதல்.!

கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…

36 minutes ago

சேப்பாக்கத்தில் குட்டி தோனி ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்ட ரோஹித்! க்யூட் மொமண்ட்…

சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…

60 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: சென்னையில் இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…

1 hour ago

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

12 hours ago

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

12 hours ago