ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 60 அடி பிரமாண்ட கட்-அவுட்..! கொண்டாடிய ரசிகர்கள்.!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது 36 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள அவரது ரசிகர்கள் பலரும் இணைந்து 60 அடி உயர பிரமாண்ட கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
Rohit Sharma fans celebrating the birthday of their idol in Hyderabad. #HappyBirthdayRohit pic.twitter.com/EQMuSMDaBI
— Johns. (@CricCrazyJohns) April 30, 2023
மேலும், ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி, தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், 1000-வது போட்டியில் விளையாடவுள்ளது. ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து 5 முறை சாம்பியனான மும்பை அணி விளையாட உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.