ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வி..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.
அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.
தொடர் தோல்வி:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி,நடப்பு சாம்பியனான கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் 2 வது நிமிடத்தில்,கிரேட் பிரிட்டனுக்காக ஹன்னா மார்ட்டின் கோல் அடித்தார்.இதனைத் தொடர்ந்து 19 வது நிமிடம் மற்றொரு கோல் அடித்து அச்சத்தினார்.இதனையடுத்து,இந்திய அணியை மீட்க ஷர்மிளா தேவி 23 வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
எனினும்,பிரிட்டன் அணியின் லில்லி ஓவ்ஸ்லி 41 வது நிமிடத்திலும், கிரேஸ் பால்ஸ்டன் 57 வது நிமிடத்திலும் கோல் அடித்ததால்,இறுதியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது.
We fought hard but a win was hard to come by.
Here are some glimpses from #TeamIndia‘s match against Great Britain. #GBRvIND #HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TokyoTogether #Cheer4India #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey
1/2 pic.twitter.com/aKv6m5qvzD
— Hockey India (@TheHockeyIndia) July 28, 2021
இதன்காரணமாக,நாக் அவுட் நிலைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெற இந்திய அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி,இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் வருகின்ற வெள்ளிக்கிழமை விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.