இந்திய டி-20 அணியில் சூரியகுமார் யாதவ்.. வைரலாகும் இந்திய அணி செலக்டரின் பழைய கமண்ட்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் சூரியகுமார் யாதவ் இடம் பெற்றுள்ள நிலையில், அணியின் செலக்டரான அபே குருவில்லாவின் கமண்ட் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலகிலே பெரிய மைதானமான மோதேரா பட்டேல் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடருக்கு பின் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், மார்ச் 12 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் இந்திய டி-20 அணியில் தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
தற்போது முதன்முறையாக இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் (SKY) சேர்க்கப்பட்டுள்ளானர். நீண்ட நாட்களாக இருந்த பொறுமையின் காரணமாக தற்போது அணியில் இடம் பிடித்துள்ள சூரியகுமார் யாதவ், இதனை கனவு போன்று உணர்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் செலக்டரான அபே குருவில்லா, சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாட வேண்டும் என ரசிகர் ஒருவரின் போஸ்டரில் கடந்த 2019 ஆம் ஆண்டில் “sky-க்காண நேரம் வரும்” என கமண்ட் செய்துள்ளார். தற்பொழுது அந்த கமண்ட், வைரலாகி வருகிறது.
What is this? ???????? pic.twitter.com/1A2f9KlPa2
— Jooreyaaaa???? (@justninteen) February 22, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024