ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் தொடர்ந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள்.

Rohit Sharma

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்திலே தன்னுடைய விக்கெட்டை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பறிகொடுத்தார்.  ஏற்கனவே, நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனவே, இந்த இங்கிலாந்து தொடரில் அசத்தலாக விளையாடி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாகவே பழைய பார்முக்கு திரும்புவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல்போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த காரணத்தால் ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். இந்திய அணிக்காக கடைசி 10 இன்னிங்ஸ்களில் ரோஹித் குறைந்தது 20 ரன்களைக் கூட எடுக்கவில்லை என்பதால் அவர் மீது விமர்சனங்களும் கொட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதல் இப்போது வரை (2024- 25)  சீசனில் ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 16 இன்னிங்ஸ்களில் (6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9, 2) மொத்தம் 166 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில், கடந்த 10 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோர் என்று பார்த்தால் 18 தான். 18 ரன்களை கூட அவர் கடந்த 10 போட்டிகளில் தாண்டவில்லை. இந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி  தொடர் தொடங்கப்படவுள்ளது. இந்த சூழலில், இன்னும் அணியின் கேப்டன் ரோஹித் பழைய பார்முக்கு திரும்பவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கடைசி சில இன்னிங்ஸ்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அற்புதான ஸ்ட்ரைக் ரேட்டுகள் மற்றும் சராசரி நன்றாக வைத்துள்ளார். குறிப்பாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 27 இன்னிங்ஸ்களில் 1196 ரன்கள் எடுத்திருந்தார்.  அதைப்போல, கடந்த 2017 -ஆம் ஆண்டில் 21 இன்னிங்ஸ்களில் 1293 ரன்கள் எடுத்திருந்தார். எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர் பழையபடி பார்முக்கு வரலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்