ஐயோ அவுட் ஆகிட்டேன்! செம கடுப்பில் நிதிஷ் செய்த செயல்..வைரலாகும் வீடியோ!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவுட் ஆன கோபத்தில் ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஹெல்மெட்டை வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 190 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில்ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அவுட் ஆன பிறகு கோபத்தில் செய்த செயல் வைரலாகி வருகிறது.
போட்டியில் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் 15/2 என்ற நிலையில் தடுமாறியது, ஷர்துல் தாக்கூர் அபிஷேக் (6) மற்றும் கிஷன் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். எனவே, அடுத்ததாக நிதிஷ் மற்றும் ஹெட் அணியை மீட்க விளையாடி கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே அவர்கள் அழுத்தத்தில் இருந்த நிலையில், பிஷ்னோய் நிதிஷை அவுட் செய்தது அணிக்கு மற்றோரு பின்னடைவை ஏற்படுத்தியது.
நிதிஷ், அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன நிலையில், சிறப்பாக விளையாடி கடைசி வரை விளையாடினாள் தான் எதிரணிக்கு நல்ல டார்கெட் வைக்கமுடியும் என்ற நோக்கத்தோடு விளையாடி கொண்டு இருந்தார். 32 ரன்கள் ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், அவர் பெரிய ஸ்கோர் எடுக்க தவறியதால் அவுட் ஆன பிறகு கோபத்துடன் பெவிலியனை நோக்கி நடந்து கொண்டு இருந்தார். அப்போது பெவிலியன் செல்லும்போது கையில் வைத்திருந்த தனது ஹெல்மெட்டை தூக்கி படியில் வீசினார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் பலரும் கோபத்தை விடுங்கள் என கூறி வருகிறார்கள்.
Tough night 😬 #SRHvLSG pic.twitter.com/jtSy0rBOuy
— Nitish Kumar Reddy (@NitishKReddy) March 27, 2025