சூர்யகுமார் யாதவ் கேட்ச் செய்ய முயலும் போது இடது கண்ணில் அடிபட்டு, பந்து சிக்ஸருக்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023: நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் கண்ணில் பந்து மோதியதால் காரணமாக காயம் அடைந்தார். 17 ஓவரில் டெல்லி வீரர் அக்சர் படேல் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பந்தை வேகமாக சிக்ஸருக்கு அடித்தார். அப்போது அங்கு இருந்த சூர்யகுமார் கேட்ச்சை எடுக்கத் தயாராக இருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பந்து சூர்யகுமார் யாதவின் கண்ணீல் மோதி பின்னாடி இருந்த சிக்ஸர் லைனை தொட்டது . இதனால் சூர்யகுமார் கடுமையான வலியில் கண்ணை பிடித்துக்கொண்டார். வலியால் துடுத்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, 4-ஆவது விக்கெட்டுக்கில் களமிறங்கினார். ஆனால், அவர் பேட்டிங் செய்ய வந்த வேகத்தில் முகேஷ் குமார் ஓவரில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நேற்று மட்டுமில்லை கடந்த சில மாதங்களாகவே சூர்யகுமார் யாதவின் பார்ம் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
குறிப்பாக இதற்கு முன்பு கடந்த 6 இன்னிங்ஸ்களில் 4 முறை கோல்டன் டக் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர்ந்து டக் அவுட் ஆனார். அதில் இருந்து ஐபிஎல் போட்டியிலாவது பார்முக்கு திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதுவரை அவருக்கு மோசமான சீசனாக இந்த சீசன் தொடங்கியுள்ளது.
ஆம், இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக அவர் முதல் போட்டியில் 15, இரண்டாவது போட்டியில் 1, மூன்றாவது போட்டியில் 0 என்று ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் பெரிய அளவில் ஒரு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. விரைவில் ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி காம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…