2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
மின் விளக்கு திடீரென கோளாறு காரணமாக, ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறித்து ஒடிசா கிரிக்கெட் சங்கத்திடம் (OCA) மாநில அரசு விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு பராபதி மைதானத்தின் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய தினம் கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இதனிடையே, போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது, மைதானத்தின் ஃப்ளட்லைட்களில் ஒன்று தற்காலிகமாக வேலை செய்வதை நிறுத்தியது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது போட்டியானது 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, திடீர் நிறுத்தம் காரணமாக ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பராபதி மைதானம் ஒரு சர்வதேச போட்டியை நடத்தியதால், சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான OCA-வின் நிர்வாகத் திறன் கேள்விக்குறியாகியது. இங்கிலாந்தின் 305 ரன்கள் இலக்கை துரத்திச் சென்ற இந்திய அணி, போட்டியின் ஏழாவது ஓவரில் இந்திய அணியின் ரோஹித் சர்மாவும் ஷுப்மான் கில்லும் நடுவில் பேட்டிங் செய்து கொண்டிருந்த தருணம் அது.
இந்நிலையில், அது எப்படி நடந்தது என்பதை அறிய ஒடிசா அரசு இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது. அந்த நோட்டீஸில், “இதுபோன்ற தவறுகளுக்கு காரணமான நபர்கள், ஏஜென்சிகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து 10 நாட்களுக்குள் என்ன பிரச்னை என்பதை சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று ஒடிசா அரசின் அதிகாரப்பூர்வ நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.