பாகிஸ்தான் – இலங்கை இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு சதங்களைப் பெற்ற முதல் ஆட்டமாக அமைந்துள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 8-ஆவது லீக் போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 77 பந்துகளில் 122 ( சிக்ஸர்ஸ் 6, பவுண்டரி 14) ரன்களை அடித்தார். குறிப்பாக அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளையும் இந்த உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்தினார்.
அதாவது, உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணி சார்பாக அதிவேக (65 பந்துகளில்) சதம் அடித்த வீரராக குசால் மெண்டிஸ் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அதேபோல் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையும் இன்று படைத்துள்ளார். இதுபோன்று இலங்கையின் மற்றொரு வீரர் சமரவிக்ரம சிறப்பாக விளையாடி 89 பந்துகளில் 108 ( சிக்ஸர்ஸ் 2, பவுண்டரி 11) ரன்களை எடுத்தார். இது அவருடைய முதல் சதமாகும்.
இதனைத்தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கோப்பாய் வரலாற்றிலேயே அதிகபட்ச சேஸ் சாதனை படைத்தது. அதாவது, 48.2 ஓவரில் 4 விக்கெட் இழந்து 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் 103 பந்துகளில் 113 ( சிக்ஸர்ஸ் 3, பவுண்டரி 10) ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தானில் மற்றொரு நட்சத்திர வீரரான முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 121 பந்துகளில் 131 ( சிக்ஸர்ஸ் 3, பவுண்டரி 8) ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். எனவே, ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் 4 வீரர்கள் சதம் அடித்தது இதுவே முறையாகும். அதாவது, உலகக் கோப்பை வரலாற்றிலேயே பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 4 சதங்கள் அடித்த முதல் ஆட்டமாக இது அமைந்துள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…