NZvsSA: டாஸ் வென்றது நியூசிலாந்து.! பேட்டிங் செய்ய களமிறங்கும் தென்னாப்பிரிக்கா.!

NZvsSA

NZvsSA : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் டாம் லாதமின் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் இதுவரை தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி விவரப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடரில் இருக்கும் பத்து நாடுகளின் அணிகளை விட சிறந்த ரன்-ரேட்டையும் (NRR) தென்னாப்பிரிக்கா கொண்டுள்ளது.

நியூசிலாந்து அணி  6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அதில் நியூசிலாந்திற்கு எதிராக தென்னாப்பிரிக்கா 41 முறை வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் ஐந்து போட்டிகள் முடிவு இல்லாமல் முடிந்தது. இந்த உலகக்கோப்பை முழுவதிலும் தென்னாப்பிரிக்கா 300 முதல் 400க்கும் அதிகமான ரன்களை குவித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்தை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த போட்டியாக இருக்கும் என்பதை சந்தேகம் இல்லை. தற்போது டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அதன்படி, குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

இப்போது இந்த போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக அமையும் என்று உறுதியாக தெரிகிறது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா இதுவரை வெற்றி பெற்ற போட்டிகளில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா:

குயின்டன் டி காக்(w), டெம்பா பவுமா(c), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

நியூசிலாந்து:

டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(w/c), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்