#NZvsSA : ஸ்டீவ் ஸ்மித் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன் ..!
நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதன் பின் பிப்ரவரி 13 ம் தேதி தொடங்கிய இரண்டாம் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் சற்றும் எதிர்பாராத மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூஸிலாந்து அணி 211 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆன காரணத்தால் 31 ரன்கள் பின்தங்கியும் இருந்தது.
#INDvsENG : டெஸ்டில் ‘500’ விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை ..!
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. இதனால் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூஸிலாந்து அணி களமிறங்கியது. இந்த இன்னிங்ஸில் விளையாடிய கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133* எடுத்திருந்தார். இவரது சதத்தால் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இவர் அடித்த சதம் மூலம் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் தனது 32-வது டெஸ்ட் சதத்தை வெறும் 174 டெஸ்ட் இன்னிங்ஸில் வேகமாக அடித்துருந்தார். தற்போது, வில்லியம்சன் தனது 32-வது சதத்தை வெறும் 172 டெஸ்ட் இன்னிங்ஸில் வேகமாக பூர்த்தி செய்ததன் மூலம் ஸ்டீவ் ஸ்மித் சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார்.
வேகமாக 32 டெஸ்ட் சதங்களை அடித்தவர்களின் பட்டியல் :
- கேன் வில்லியம்சன் – 172 டெஸ்ட் இன்னிங்ஸ்.
- ஸ்டீவ் ஸ்மித் – 174 டெஸ்ட் இன்னிங்ஸ்.
- ரிக்கி பாண்டிங் – 176 டெஸ்ட் இன்னிங்ஸ்.
- சச்சின் டெண்டுல்கர் – 179 டெஸ்ட் இன்னிங்ஸ்.
- யூனிஸ் கான் – 183 டெஸ்ட் இன்னிங்ஸ்.