NZvsSA: அதிரடியான சதங்கள்…நியூசிலாந்துக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்கா!

NZvsSA

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 32-ஆவது லீக் ஆட்டத்தில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், டாம் லாதமின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ம் மோதி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான களமிறங்கிய குயின்டன் டி காக், கேப்டன் தெம்பா பவுமா களமிறங்கினர். இதில், 24 ரன்களில் கேப்டன் விக்கெட்டை இழக்க, இவரைத்தொடர்ந்து ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். பின்னர், டி காக், வான் டெர் டுசென் நிதானமாக விக்கெட்டை இழக்காமல் அணிக்கு ரன்களை குவித்து வந்த நிலையில், சிறப்பாக விளையாடிய இருவரும் தங்களது சதங்களை பூர்த்தி செய்தனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவே பறந்த பாலஸ்தீன கொடி.! 4 பேர் உடனடி கைது.!

இதையடுத்து, இருவரும் இறுதி வரை இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குயின்டன் டி காக் 116 பந்துகளில் (10 பவுண்டரிஸ், 3 சிக்ஸ்)  114 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து, மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 118 பந்துகளில் ( 9 பவுண்டரிஸ், 5 சிக்ஸ்) 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சவூதி ஓவரில் போல்டனார்.

இதற்கிடையில் இறுதி கட்டத்தில் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு தென்னாபிரிக்கா அணி 357 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், இப்போட்டியில் 358 அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்