[file image]
ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று 11வது லீக் போட்டியில் நியூசிலாந்து – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.
இதன்பின், அக்.9ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, நியூசிலாந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் தொடர்ந்து இரண்டு வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது நியூசிலாந்து. தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காக வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
இதுபோன்று, வங்கதேசம் அணியை பொறுத்தவரையில், இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டி அவர்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இரு அணிகளும் இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வென்றுள்ளது. இதனால் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் கைகள் தான் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக முதல் இரண்டு ஆட்டங்களில் கேன் வில்லியம்சன் இல்லாததால், டாம் லாதம் நியூசிலாந்து கேப்டனாக செயல்பட்டார். இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் நியூசிலாந்து கேப்டனாக செயல்படுகிறார்.
பங்களாதேஷ் (விளையாடும் XI): லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.
நியூசிலாந்து (விளையாடும் XI): டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…