இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலககோப்பைத் தொடரின் 11வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் மோதிய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பங்களாதேஷ் அணியில் முதலில் லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய நிலையில், லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அவருடன் களமிறங்கிய ஹசன் பொறுமையாக விளையாட, மெஹிதி ஹசன் மிராஸ் சிறிது ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் தன்சித் ஹசன் ஆட்டமிழக்க, ஹசன் மிராஸும் 30 ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். அவரையடுத்து, ஹொசைன் சாண்டோ ஒற்றை இழக்க ரன்னில் ஆட்டமிழக்க, அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
பொறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த அல் ஹசன் அரைசதத்தை தவறவிட்டு, 40 ரன்களில் பெர்குசன் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் முஷ்பிகுர் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். 75 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த முஷ்பிகுரின் விக்கெட்டை, மாட் ஹென்றி கைப்பற்றினார்.
இதன்பிறகு தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லாஹ் விளையாட ஹ்ரிடோய் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய தஸ்கின் அகமது 17 ரன்களும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். மஹ்முதுல்லாஹ் இறுதிவரை களத்தில் நின்று 41 ரன்கள் எடுத்தார். முடிவில், பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக முஷ்பிகுர் 66 ரன்களும், அல் ஹசன் 40 ரன்களும், மஹ்முதுல்லாஹ் 41 ரன்களும் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…