ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் இன்று தொடங்கி உள்ளது. இந்த சுற்று பயணத் தொடரில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின் தலைநகரமான வெல்லிங்டனின் ஸ்கை மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..!
நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரரான ஃபின் ஆலனும், டெவோன் கான்வேயும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறடித்து கட்டுக்குக்கடங்கா ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரின் அபார ஆட்டத்தால் 5 ஓவர்களுக்கு நியூஸிலாந்து அணி 59 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடிய ஃபின் ஆலன் 6-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்டார்க் பந்து வீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய ஃபின் ஆலன் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். அதன் பின் நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கான்வேயும், ரவீந்திராவும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஆட்டத்தின் 16-வது ஓவரின் கடைசி பந்தில் பேட் கம்மின்ஸின் பந்தில் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பின் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மிட்செல் மார்ஷின் பந்தில் டெவோன் கான்வேயும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெவோன் கான்வே 46 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 35 பந்துகளில் 6 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் விளாசினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 113 ரன்களை நியூஸிலாந்து அணிக்காக சேர்த்தனர்.
அதன் பின் களத்தில் இருந்த கிளென் பிலிப்ஸும், மார்க் சாப்மேனும் ஒரு சிறிய கேமியோ பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயரத்தினர். இறுதியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்திருந்தது. 216 என்ற இமாலய ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…