#NZvsAUS : டி20 தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூஸிலாந்து அணி..!
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணியின் இடையேயான சுற்று பயணம் கடந்த 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. இந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
Read More :- #INDvENG: 4-வது டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!
இதில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவிந்திராவும் , கான்வேயும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 215-3 என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பவுண்டரிகள் அடித்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பந்தை எதிர்கொண்ட டிம் டேவிட் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 3-டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 இன்று கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Read More :-#IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் சமி ? அப்போ குஜராத் கதி ..?
அந்த டி20 தொடரின் 2-வது போட்டி இன்று காலை 11.40 மணிக்கு ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நியூஸிலாந்து அணி வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பிலும், ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முன்னைப்பிலும் இருக்கின்றனர்.