NZvsAUS : ஆட்டத்தின் போக்கை மாற்றிய கேமரூன் கிரீன் ..! விக்கெட்டை எடுக்க திணறும் நியூஸிலாந்து அணி ..!
NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 இன்று கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆன ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் சில மணி நேரம் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன் பிறகு படிப்படியாக விக்கெட்டுகள் விழ தொடங்கியது. ஒரு பக்கம் நிலைத்து ஆடிய கேமரன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
Read More :- BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!
அவருடன் எந்த ஒரு வீரரும் இறுதிவரை நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர். ஆனால், கேமரன் கிரீனின் விக்கெட்டை எடுக்க முடியாமல் நியூஸிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வருகின்றனர். தனி ஆளாக நின்று சதம் விளாசி நியூஸிலாந்து அணியை கலங்க வைத்துக்கொண்டு இருக்கிறார். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 85 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழுந்து 279 ரன்கள் எடுத்திருக்கிறது.
Read More :- ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..!
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 185 பந்துகளுக்கு 103 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் அவருடன் ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்க உள்ளார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 3.15 மணிக்கு தொடங்கும்.