NZvsAUS : 217 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி ..! கட்டுப்படுத்துமா நியூஸிலாந்து ..?
NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
Read More :- IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..!
இதனால், தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டத்தின் போக்கை கேமரன் கிரீன் மிகச்சிறப்பாக விளையாடி மாற்றினார். அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு சதம் விளாசியும் அசத்தினார். அவருடன் எந்த ஒரு வீரரும் இறுதி வரை நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர்.
மேலும், நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழுந்து 279 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் ஆஸ்திரேலிய அணியின் க்ரீனும், ஹேசில்வுட்டும் கடைசி விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி நிலைத்து ஆடினார்கள். இதன் மூலம் 115.1 ஓவருக்கு 383 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசில்வுட் அவுட் ஆனார்.
Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?
இதனால், ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது. நியூஸிலாந்து அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எப்படியோ தட்டு தடுமாறி விளையாடியதில் இறுதியில் 43.1 ஓவருக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Read More :- #NZvsAUS : இப்படி ஒரு நிகழ்வு எந்த வீரருக்கும் நடக்காது..! மீண்டும் களத்தில் நீல் வாக்னர் ..!
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்து வீசிய நாதன் லியோன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், தங்களது இரண்டாவது இன்னிங்ஸிற்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 13-2 என தடுமாறி வருகிறது. தற்போது, உஸ்மான் கவாஜா 18 பந்துகளில் 5 ரன்களும், நாதன் லியோன் 14 பந்துகளில் 4 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.