#NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..!
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்று பயணம் கடந்த பிப்ரவரி 21- ம் தேதி தொடங்கியது . இந்த சுற்று பயணத்தில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் போட்டி கடந்த பிப்ரவரி 21- ம் தேதி வெல்லிங்டனில் நடைபெற்றது. நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.
Read More : – #INDvsENG : அறிமுக போட்டியில் இங்கிலாந்தை அளரவிட்ட ஆகாஷ் தீப் ..!
இதனால் டி20 தொடரையும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த தொடரின் 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 22 பந்துகளில் 45 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சராசரியாக 28, 26 என்ற ரன்களை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதை தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது நியூஸிலாந்து அணி.
Read More : – #IPL 2024 : சென்னையில் முதல் போட்டி ..! வெளியானது ஐபிஎல் அட்டவணை..!
தொடக்க வீரர்களின் மோசமான ஆட்டத்தால் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது நியூஸிலாந்து அணி. மறுபக்கம் க்ளென் பிலிப்ஸ் மட்டும் நிதானத்துடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியில் அவரை தாண்டி யாரும் பொறுப்பெடுத்து விளையாடாமல் போனதால் இறுதியில் நியூஸிலாந்து அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி உள்ளது. மேலும், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 11.40 மணிக்கு நடைபெறும்.