CWC23 : 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று சனிகிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், முதலில் 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல் நேர போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பாக 4 தொடர் வெற்றி, ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து உள்ளது நியூசிலாந்து.
இதனால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கிற சூழலில் நியூசிலாந்து உள்ளது. உலகக்கோப்பை தொடக்கத்தில் நல்ல பார்மில் இருந்த நியூசிலாந்த அணி தொடர் தோல்வி, துவண்டு முக்கிய வீரர்களின் காயம் கவலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும், இப்போட்டி முக்கியம் என்பதால் காயத்தில் இருந்து மீண்டு இன்றையில் போட்டியில் மீண்டும் கேன் வில்லியம்சன் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.!
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 6து இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டி வெற்றியுடன் நல்ல ரன் ரேட்டும் பெற வேண்டும் என்பது அவசியமாகிறது. இதை செய்தால் மட்டுமே அரை இறுதி போட்டிக்கு வாய்ப்பு இருக்கும். அதுவும் மற்ற அணிகளின் குறித்தே முடிவெடுக்கப்படும்.
நான்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான். இந்த வெற்றியால் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. எனவே, இரு அணிகளிலும் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக உள்ளதால் இப்போட்டியில் நீயா நானா என்று அனல்பறக்கம் ஆட்டம் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கபடுகிறது. தற்போது, பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து (விளையாடும் XI): டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
பாகிஸ்தான் (விளையாடும் XI): அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), இப்திகார் அகமது, சவுத் ஷகீல், ஆகா சல்மான், ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…