NZvPAK: போட்டியின்போது பாகிஸ்தான் செய்த தவறுகளை தனது போர்டில் குறிப்பிட்ட ரசிகர்!
நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையே நடக்கும் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி செய்த தவறுகளை நியூசிலாந்து ரசிகர் ஒருவர், தனது கையில் இருக்கும் ஒரு போர்டில் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி, 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுன்கனுயில் நடைபெற்று வருகிறது. 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 431 ரன்கள் எடுத்தது. அடுத்த தனது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 239 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து, 192 ரன்கள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி செய்த தவறுகளை நியூசிலாந்து ரசிகர் ஒருவர், தனது கையில் இருக்கும் ஒரு போர்டில் குறிப்பிட்டுக்கொண்டு வந்தார்.
அந்த போர்டில் பாகிஸ்தான் அணி, 2 முறை கேட்ச்சை ட்ராப் செய்துள்ளதாகவும், 18 முறை புவர் த்ரோ (Poor Throw) செய்துள்ளதாகவும், 2 முறை டி.ஆர்.எஸ்.-ஐ தவறாக பயன்படுத்தியதாகவும், 6 முறை மிஸ்-பீல்ட் செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.