#NZvAFG: டாம் லாதம், பிலிப்ஸ் அரைசதம்! ஆப்கானிஸ்தானுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐசிசியின் ஒருநாள் உலக்கோப்பை தொடரின் 16-ஆவது லீக் போட்டியில்டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நான்காவது வெற்றியை ருசிக்க நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. அதேவேளையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி புதிய நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டெவோன் கான்வே 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னரே வில் யங், ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், வில் யங் 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து டேரில் மிட்செல் ஒரு ரன்னில் அவுட்டாக, ரச்சின் ரவீந்திரன் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஷித் கான் பந்தில் வெளியேறினார். இதன்பின் கேப்டன் டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
இறுதிக்கட்டம் வரை களத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது, 68 மற்றும் 71 ரன்களுக்கு இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியாக நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025