உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதி அசத்தல் வெற்றி பெற்றது போல நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் ஷாக் கொடுக்குமா.? அல்லது 3 தொடர் வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4வது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நியூசிலாந்து அணி சார்பாக, டாம் லாதம் தலைமையில், டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (WK), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…