NZ vs SA : இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு!
நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் 73 ஒருநாள் போட்டிகளில் (ODI) மோதியுள்ளன. தென்னாப்பிரிக்கா 42 முறையும், நியூசிலாந்து 26 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா : ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா(சி), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென்(வ), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி
நியூசிலாந்து அணி : வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்
இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறதோ அந்த அணி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்கள். எனவே, இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025