NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இதில், பாகிஸ்தானைத் தவிர, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் பாகிஸ்தனை வீழ்த்திய நியூசிலாந்து அணி, இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்தத் தொடரின் கடைசிப் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும். வெற்றி பெறும் அணி பிப்ரவரி 14 அன்று இறுதிப் போட்டியில் விளையாடும். இன்றைய தினம் தென்னாப்பிரிக்காவின் 304 ரன்கள் எடுத்த இலக்கை நியூசிலாந்து கடந்து முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆட்டத்தின் பாதியில் வீரர்கள் அடுத்தடுத்த சரிந்த நிலையில், மேத்யூ பிரீட்ஸ்கே 148 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியின் வரலாற்றில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ப்ரிட்ஸ்கோ படைத்தார்.
மொத்தத்தில், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வைத்தது. பின்னர், 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர் வில் யங்கை வெறும் 19 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். டெவோன் கான்வே மற்றும் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தனர்.
கான்வே 107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். நூலிழையில் கான்வே தனது சதத்தை மிஸ் செய்தாலும், வில்லியம்சன் 72 பந்துகளில் சதம் அடித்து, 113 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் தனது 14வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். இறுதியில், 48.4 ஓவர்களில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 308 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
மிரளவிட்ட கேன் வில்லியம்சன்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 14வது சதத்தை பதிவு செய்தார் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் . இது அவரது வாழ்க்கையில் இரண்டாவது வேகமான ஒருநாள் சதமாகும். இதுவரை 365வது போட்டியில் தனது 47வது சதத்தை அடித்தார்.