‘இப்போ தான் நிம்மதி’ ..வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் ஓபன் டாக் ..!

Rishab pant [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற போட்டிக்கு பின் டெல்லி அணியன் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார்.

நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி அணியும் பாரத் ரத்னா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாட களமிறங்கியது. இதனால் நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் சிறப்பாக விளையாடிய ஆயுஷ் பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து 168 என்ற இலக்கை எடுக்க டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய டெல்லி அணி 18.1 ஓவரிலியே 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. டெல்லி அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த போட்டி நிறைவடைந்த பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், ” இந்த வெற்றி சில மோசமான தோல்விகளுக்கு பிறகு கிடைக்கிறது இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறிய நிம்மதி அளிக்கிறது. நான் என் அணியினரோடு கலந்து பேசினேன் நாம் எப்போதும் நம்மை சாம்பியன்களாகவே நினைக்க வேண்டும்.

இது போதாது நாம் தொடர்ந்து போராட வேண்டும். நமக்கு சவாலான சில கடுமையான கட்டங்கள் வர உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் சில தனி நபர்கள் பொறுப்பேற்று விளையாட வேண்டும். மேலும், அப்படி தனி நபர்கள் விளையாடும் பொழுது கூட ஒரே அணியாகவே நாங்கள் செயல்பட்டோம்”, என்று போட்டி முடிந்த பிறகு டெல்லி அணியின் கேப்டனின் ரிஷப் பண்ட் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்