‘எதுவும் என்னை தடுத்து நிறுத்தவில்லை’ ! டிராவிஸ் ஹெட் பேசியது இதுதான் !!

Travis Head [file image]

ஐபிஎல் 2024 : பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் போட்டிக்கு பிறகு பேசி இருந்தார்.

நேற்றைய நாளின் ஐபிஎல் தொடர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் பெங்களூரு பவுலர்களை துவம்சம் செய்தார். அவர் அதிரடியில் வெறும் 39 பந்துக்கு 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய கிளாஸ்ஸனும் அதிரடி காட்ட இறுதியில் 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகள் இழந்து 287 ரன்கள் ஹைதராபாத் அணி எடுத்தது. அதன் பின் இமாலய இலக்கை சேஸ் செய்வதற்கு களமிறங்கிய பெங்களூரு அணியும் ஹைதரபாத் அணிக்கு நிகராகவே வெளுத்து வாங்கினார்கள். பெங்களூரு அணியில் இறுதி வரை போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துக்கு 83 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை மிரள வைத்து அவுட் ஆனார்.

இறுதியில், பெங்களூரு அணியால் 262 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், போட்டி முடிந்த பிறகு 41 பந்துக்கு 102 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இன்று பிட்ச் அருமையாக என் வசம் அமைந்தனால் அருமையாக விளையாட முடிந்தது. பவர்ப்ளே ஆன ஆரம்ப ஆறு ஓவர்களில் நாங்கள் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினோம்.

மேலும், எங்கள் பேட்டிங் லைன்-அப் நன்றாக அமைந்தது. பந்து வீச்சாளர்களை ஆக்ரோஷமாக அடித்து விளையாட அணியில் ஒரு சுதந்திரம் கிடைத்தது. இந்த தொடரில் நானும், அபிஷேக் சர்மாவும் ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை வைத்துள்ளோம். அவருடன் பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசிக்கிறேன். பந்துவீச்சாளர்கள் பல்வேறு அணுகுமுறைகளை முயற்சித்தனர்.

ஆனால் எதுவும் என்னை தடுத்து நிறுத்தவில்லை. எனது விளையாட்டு முறையான கிரிக்கெட் போல இல்லாவிட்டாலும் இன்று நான் இப்படி விளையாடினேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”, என்று போட்டி முடிந்த பிறகு ஆட்டநாயகன் விருதை

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்