உலகக்கோப்பையில் இந்த 5 போட்டிகளை குறிச்சு வச்சுக்கோங்க… ஐசிசி குறிப்பிட்ட 5 முக்கிய மேட்ச்கள்…

CWC23

நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கவுள்ளது.

2023 உலகக்கோப்பை 50 ஒவர் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று வெளியானது. நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

உலகக்கோப்பைத் தொடருக்கு சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. அக்.5-ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி.

அதே போல் அக்.8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.  இறுதிப்போட்டி நவம்பர் 19-இல் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.

இந்த நிலையில், 2023 ODI உலகக் கோப்பை தொடரில் 5 முக்கிய போட்டிகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியாகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகள் மீது எப்போதுமே அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கும், அவை உலகக் கோப்பையில் நடக்கும்போது எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

50 ஓவர் உலகக் கோப்பையில் 2 அணிகளுக்கு இடையேயான 7 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, மீண்டும் இந்த முறையும் ஆதிக்கம் செலுத்துமா என எதிர்பார்க்கபடுகிறது. இதுபோன்று, அக்.5ம் தேதி அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி பலபரிச்சை செய்கிறது. இது ஒரு முக்கியமான ஆட்டமாக இருக்கும்.

அதேபோல், அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா, அக்டோபர் 13-ம் தேதி லக்னோவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் அக்டோபர் 7ம் தேதி தர்மசாலாவில் நடக்கவுள்ள பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என இந்த 5 முக்கிய போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்