கொஞ்சம் கூட நியாயமே இல்லை! விராட் கோலி அவுட்டானது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கருத்து!
Virat Kohli : விராட் கோலிக்கு அவுட் கொடுத்த முடிவு கொஞ்சம் கூட நியாயமானது இல்லை என ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்ததாக 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக 1 ரன்கள் வித்தியாசத்தில் கொல்காத்தா அணி வெற்றிபெற்றது. இந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது விராட் கோலி அவுட்டான விதம் பெரிய அளவில் பேசும் பொருள் ஆகி உள்ளது. விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் முறை மிகவும் தவறு என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர்,”என்னை பொறுத்தவரை விராட் கோலிக்கு கொடுத்த முடிவு நடுவரின் தவறு இல்லை என்று தான் நான் சொல்வேன். ஆனால் இந்த விக்கெட் கொடுக்கப்பட்ட விதம் சத்தியமாக எனக்கு புரியவே இல்லை மேலும் அது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கிறது.
கால்பந்து போட்டிகளில் கோடுகள் வரைந்து பயன்படுத்துவது போல விராட் கோலி எந்த இடத்தில் நின்று இருந்தாரோ அந்த இடத்திலிருந்து அவர் பந்தை எதிர்கொண்ட விதம் வரை அளவு வைத்து பார்த்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை அவருக்கு விக்கெட் கொடுத்ததே நியாயமே இல்லை என்று தான் சொல்வேன்”, என ஏபிடி வில்லியர்ஸ் கூறி இருந்தார்.