தோனி போட்ட அந்த கண்டிஷன்.! ஒரு நோ பால் கூட வீசவில்லை….

Published by
கெளதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளில் “நோ-பால்” மற்றும் அதிக வைடுகளை வீச வேண்டாம் என்று தனது பந்து வீச்சாளர்களை எச்சரித்துள்ளார்.

16-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “எல் கிளாசிகோ” எனும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது.

நேற்று நடைபெற்ற MI உடனான போட்டியில் CSK அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 158 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு கான்வே டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ரஹானே அதிரடியாக ஆடி MI அணி வீசிய பவுலிங்கை வெளுத்து வாங்கினார்.

அவர் 61 ரன்களில் அவுட் ஆக, அதன் பின் வந்த துபே 28 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் நிதானமாக ஆடி வந்த ருத்துராஜ் 40 அடிக்க, CSK 18.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது.

அந்த வகையில், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், சென்னை பவுலர்கள் ஒரு நோ பால் கூட வீசவில்லை. முன்னதாக, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற லக்னோ உடனான போட்டியின் போது, சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தனது அணியின் பந்து வீச்சாளர்கள் நோ-பால் மற்றும் வைடு பந்துகளை வீசுவதை குறைக்க வேண்டும்.

மேலும், தனது அணியினர் அத்தகைய பந்துவீச்சைக் குறைக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாடுவார்கள் என்றும் இது எனது இரண்டாவது எச்சரிக்கை, இதையும் கேட்காவிட்டால் நான் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவேன் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

“அந்தர் பல்டி திமுக!  நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!

“அந்தர் பல்டி திமுக!  நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…

33 minutes ago

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

2 hours ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

2 hours ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 hours ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

4 hours ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

4 hours ago