ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததில் ஆச்சரியமில்லை..! சுனில் கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததில் ஆச்சரியமில்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்பின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, சுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ரோகித் சர்மா ஆட்டமிழந்தது குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் 2023 தொடரில் இருந்தே ரோகித் சர்மா ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். அதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அவர் இவ்வாறு ஆட்டமிழந்ததில் ஆச்சரியமில்லை எனக் கூறியுள்ளார்.