“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

இந்திய அணியில் தரமான ஆல் ரவுண்டர்களை கொண்டுள்ளோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

Gautam Gambhir

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும், நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முன்னிலை வகித்து விளையாடி வருகிறது.

இப்படி இருக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியளரான கவுதம் கம்பீர் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தார். மேலும், அங்கு பல விஷயங்களை பகிர்ந்த அவர், முன்னெல்லாம் ரசிகர்கள் பேட்ஸ்மேன்களை மட்டும் தான் கொண்டாடி வந்தனர்.

ஆனால், தற்போது பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களையும் கொண்டாடுகிறார்கள் என கூறி இருக்கிறார். இது குறித்து அவர் பேசிய போது, “முன்னெல்லாம் பேட்ஸ்மேன்களை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள், ஆனால் இப்போது பவுலர்களையும் கொண்டாடுகிறார்கள்.

அதற்கு காரணம் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இந்த கிரிக்கெட் ரசிகர்களை பவுலிங்கையும் விரும்பும் நாடாக மாற்றியுள்ளனர். அதிலும் பும்ரா உலகின் சிறந்த பவுலர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாட விரும்புவதே சிறந்த விஷயமாகும். பொதுவாக டெஸ்ட் போட்டிகள் எப்போதும் வசதியாக இருக்காது.

அதில் பும்ரா போட்டியின் எந்த நேரத்திலும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். அதே போல நாம் கபில் தேவைப் போல ஒரு வேக பந்து வீச்சை கொண்ட ஆல்ரவுண்டர் இல்லை என வருத்தப்படுகிறோம். அது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர் போன்ற சிறந்த ஸ்பின் ஆல் ரவுண்டர் வீரர்கள் கொண்டு உலகில் வேறு எந்த கிரிக்கெட் அணியிலும் கிடையாது. இருந்தாலும் என்னிடம் கூறலாம். நாம் அதில் சிறப்பாக இருக்கிறோம்”, என கவுதம் கம்பீர் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்