“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கவேண்டும் என ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணிக்காக இடம்பெறவேண்டும் என்ற பிளேயிங் லெவனை தேர்வு செய்து வருகிறார்கள்.
தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் பலரும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தான் வேண்டும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என கூறி வருகிறார்கள். ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்ஷா போக்லே கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாமல் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள என்னுடைய தேர்வு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கவேண்டும். அடுத்ததாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் மூன்றாவது இடத்தில் இறங்கவேண்டும்.அடுத்ததாக, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கலாம்.
இவர்களில் ஒருவர் கூட நம்பர் 3-வது இடத்தில் இறங்கி தாராளமாக விளையாடலாம். அணியில் விக்கெட் கீப்பராக ராகுலை நான் தேர்வு செய்யவேன். அதைப்போல, இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தை தேர்வு செய்வேன். ஆல்ரவுண்டராகவும், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியவை தேர்வு செய்வேன். சுழல் ஆல்ரவுண்டர்களாகவும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தேர்வு செய்வேன்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பில்லை என்பதால் நான் இந்த வீரர்களை தேர்வு செய்திருக்கிறேன் எனவும், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறலாம் எனவும் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.
முன்னாள் வீரர்கள் பலரும் சஞ்சு சாம்சன் தான் இடம்பெறவேண்டும் என கூறி வரும் நிலையில், ஹர்ஷா போக்லே அவர் வேண்டாம் என நிகர்த்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சஞ்சு சாம்சனை நீங்கள் ஏன் தேர்வு செய்யவில்லை என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஹர்ஷா போக்லே தேர்வு செய்த வீரர்கள்
ரோஹித் சர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி.