டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது.
அதே போல் அடுத்த நாள் அதாவது நாளை மறுநாள் (ஜூன்-27) இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 2-வது அரை இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர். முதல் அரை இறுதி போட்டியானது ஒரு வேளை மழை காரணமாக தடைபெற்று நடக்காமல் போனால் ரிசர்வ் நாளான மறுநாள் (ஜூன்-27) இந்த போட்டியானது நடத்தப்படும்.
தற்போது, வெளியான தகவலின்படி கயானாவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கும் 2-ஆம் அரை இறுதி போட்டியில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை 2-வது அரை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் இந்த 2-வது அரை இறுதி போட்டிக்கு ரிசர்வ் நாளை ஐசிசி அறிவிக்கவில்லை.
மேலும், இறுதி போட்டிக்கு அடுத்து ஒருநாள் மட்டுமே பயிற்சி செய்ய இருப்பதன் காரணமாக இந்த போட்டிக்கு ரிசர்வ் நாளை ஒதுக்கவில்லை. இதன் காரணமாக அந்த போட்டியானது நடைபெறுமால் இருந்தால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள்.
அதற்கு காரணம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும், லீக் சுற்றிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்ததன் காரணமாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…