இனி இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது!
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது. மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் 12,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், பல விளையாட்டு போட்டிகளை ரத்து செய்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருவதால், அங்கு நடைபெறவுள்ள கவுண்டி சீசன் போன்ற அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் மே மாதம் 28ஆம் தேதி வரை ரத்து என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 4ஆம் தேதி தொடங்கவிருந்த இந்தியா-வெஸ்டிண்டிஸ் இடையான டெஸ்ட் போட்டிகளும் தள்ளிப்போகும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.