எப்படி பட்ட டார்கெட்டா இருந்தாலும் சரி அவர் போதும் ! சஞ்சுவின் வெற்றி ரகசியம் !!
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி, வெற்றி பெற்ற பிறகு சஞ்சு சாம்சன் வெற்றி பெற்றதன் காரணம் குறித்து பேசி இருந்தார்.
நேற்று இரவு நடந்த ஐபிஎல் தொடரின் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுனில் நரைன் அட்டகாசமான அதிரடி காட்டினார். மைதானத்தில் 4 பக்கங்களிலும் அவர் பவுண்டரி அடித்து ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் அடுத்த கட்டமாக உயர்ந்தது. அதன் பின் அவருடனும், அவருக்கு பிறகு களமிறங்கிய பேட்ஸ்மென்கள் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தனர். ரிங்கு சிங்கின் அதிரடி கேமியோ ஆட்டத்தால் 20 ஓவருக்கு கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 227 என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் ரன்களை குவித்தாலும் சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை ராஜஸ்தானை அணி இழந்து கொண்டு வந்தது.
ஆனாலும் ஒரு முனையில் பட்லர் தனி ஒரு ஆளாக நின்று போராடி கொண்டிருந்தார். அவருடன் ரோவ்மன் பவல், பட்லருடன் இணைந்து சிறப்பான ஒரு சிறிய கேமியோ ஒன்று விளையாடி ஆட்டமிழப்பார். அதன் பிறகு பட்லர் அதிரடி காட்டி 60 பந்துக்கு 107 ரன்கள் எடுத்து இறுதி பந்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெற்றியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “எங்கள் பேட்டிங்கில் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை நாங்கள் இழந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். ரோவ்மேன் பவலின் முக்கியமான சிக்ஸர்களும், ஜோஸ் பட்லரின் நங்குற விளையாட்டும் இந்த போட்டிக்கு எங்களுக்கு உறுதுணையாக அமைந்தது.
மேலும், இந்த பிட்சில் நரேன் மற்றும் வருண் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில நேரங்களுக்கு பிறகு எங்களுக்கு இந்த பிட்ச் சேஸ் செய்ய உதவியது. பட்லரின் அதிரடி இன்னிங்ஸ் எப்போதும் போல மாற்றத்தை ஏற்படுத்தியது. எப்படி பட்ட டார்கெட்டா இருந்தாலும் சரி அவர் போதும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்துவிட்டது”, என்று வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சன் பேசி இருந்தார்.